Quick search

​​​​​​​​​​

 

AIC நிதி உதவித் திட்டங்கள்


1 ​சமூக  சுகாதார  உதவித்  திட்டம் (CHAS)​​​
உங்கள்  வீட்டுக்கு  அருகிலுள்ள  ​பங்குபெறும்  தனியார்  மருந்தகங்களில்  கட்டணச்
சலுகைகள்  பெறுங்கள்.



தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:


​சிங்கப்பூர்  குடிமக்கள்​




அனைத்து  வயதினரும் 

தகுதி  பெறலாம்

வருமானம்  ஈட்டும்  குடும்பங்கள்​ வருமானம்  இல்லாத  குடும்பங்கள்

ஓவ்வொரு  நபருக்கான  வீட்டு  மாத​

வருமானம்  $1,800  மற்றும்  அதைவிடக்​

குறைவாக  இருக்கவேண்டும்

வீட்டின்  ஆண்டு  மதிப்பு*  $21,000  மற்றும்  அதைவிடக்குறைவாக  இருக்கவே​ண்டும்​


(*ஆண்டு  மதிப்பை  உள்நாட்டு  வருவாய்  ஆணையம்  மதிப்பிடுகிறது.   $21,000  வரையிலான  ஆண்டு ​ மதிப்பில்  எல்லா  வீவக வீடுகளும்  குறைவான  மதிப்புள்ள  சிலதனியார் வீடுகளும்  உள்ளடங்கும்.)​


ஓவ்வொரு
நபருக்கான  வீட்டு
மாத   வருமானம்


=​
குடும்பத்தின் 
​மொத்த​  மாதாந்தர
வருமானம்​
ஒன்றாக  வாழும்  குடும்ப
உறுப்பினர்களின்
​மொத்த  எ​​ண்ணிக்கை​





​​
ஓவ்வொரு  நபருக்கான
வீட்டு  மாத  வருமானம்

$1,100  மற்றும்

அதற்கும்  குறைவு


$1,101 முதல்
$1,800 வரை

முன்னோடிகள்
அனைவரும்,  அவர்களது
வருமானம்  அல்லது
வீட்டின்  ஆண்டு  மதிப்பு
எதுவாக  இருந்தாலும்,
CHAS  சலுகைகளைப்
பெறுவார்கள்.​

வருமானம்  இல்லாத
குடும்பங்களுக்கு  வீட்டின்  ஆண்டு  மதிப்பு​

 $13,000  மற்றும்
அதற்கும்  குறைவு​

$13,001 முதல்
$21,000 வரை​


பொது  மருத்துவமனைகளின்  நிபுணத்துவ  ​வெளிநோயாளி  மருந்தகங்களில்  கூடுதல்​  கட்டணச்சலுகைகள்  பெற்றிட  CHAS  திட்டத்திற்கு  விண்ணப்பம்  செய்யுமாறு  முன்னோடிகள்  ஊக்குவிக்கப்படுகிறார்கள்.​


விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்

மேல்விவரம்  அறிய  1800-275-2427 (1800-ASK-CHAS) அழைக்கவும்  அல்லது
www.chas.sg  பார்க்கவும்.


​​
2 முதிேயார்களுக்கான  நடமாட்டம்  மற்றும்  இயக்கம்  ஏற்படுத்தும்  நிதி (SMF) - துணைபுரியும்  சாதனங்களுக்கானது​
துணைபுரியும்  சாதனங்களுக்குக் கிடைக்கும்  90%  வரையிலான  நிதி  உதவியுடன்  முதியோர்கள்  தொடர்ந்து  நடமாடி,  அதிக  சுதந்திரமாக  வாழலாம்.​


​​​​
தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:


சிங்கப்பூர்  குடிமக்கள்

60 மற்றும் அதற்கு மேற்பட்ட ​வயதுடையோர்


ஓவ்வொரு  நபருக்கான  வீட்டு மாத  வருமானம்  $1,800 மற்றும்  அதைவிடக்  குறைவாக  இருக்கவேண்டும்.


விண்ணப்பதாரருக்கான​  துணைபுரியும்  சாதனத்தின்  வகையையும்  பொருத்தத்தையும்​  நிர்ணயிப்பதற்காகத்   தகுதிபெற்ற  மதிப்பீட்டாளர்  செய்யும்  மதிப்பீட்டுக்கு  உட்பட்டது.​​ 


​​​​​​விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்​​


மேல்விவரம் அறிய 1800-650-6060 மேல் விவரம் அறிய அ​​​ழைக்கவும்




3

இயலாமையுள்ள  முன்னோடித்  தலைமுறையினருக்கான  உதவித்  திட்டம்  (PioneerDAS)
நடுத்தரமான  அல்லது  கடுமையான  இயலாமைகள்  உள்ள  முன்னோடிகள்  தங்களது  பராமரிப்புத்  தேவைகளுக்கு  உதவியாக  மாதத்திற்கு  $100  பெறலாம்.



தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:​​



சிங்கப்பூரில்  வாழும்   முன்னோடிகள்

1950-ஆம்  ஆண்டுக்கு  முன்பாகப்  பிறந்தவர்கள்​


1987-ஆம்  ஆண்டுக்கு  முன்பாகச்  சிங்கப்பூர்  குடியுரிமை  பெற்றவர்கள்​


அன்றாட  வாழ்க்கை  நடவடிக்கைகளில்​   மூன்று  அல்லது   அதைவிட  அதிகமானவற்றைச்  செய்வதற்கு  நிரந்தரமாக  உதவி  தேவைப்படுபவராக  இருக்கவேண்டும்
 
pioneerDAS


விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்​​


மேல்விவரம் அறிய 
1800-650-6060 அழைக்கவும்







4 பராமரிப்பாளா்கள்  பயிற்சி  உதவித்தொகை (CTG)
ஒவ்வோர்  ஆண்டும்  $200  பயிற்சி  மானியம்  பெற்று,  உங்கள்  அன்புக்குரியவர்களை  எப்படி நல்ல  விதமாகப்  பார்த்துக்கொள்வது  என்பதைக்  கற்றுக்   ​கொள்
ள்ளுங்கள்​


தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:​​

பராமரிக்கப்படுபவர்









சிங்கப்பூர்  குடிமக்கள்  அல்லது
நிரந்தரவாசிகள்​

 

65  மற்றும்  அதற்கு  மேற்பட்ட  வயதுடையோர்​​ ​

அல்லது

 

65 வயதுக்குக்  குறைந்தவராக  இருந்தால்,  அவருக்கு  இயலாமை  இருப்பதாகச்  சிங்கப்பூரில்  பதிவு  செய்யப்பட்ட​  மருத்துவர்  சான்றளிக்கவேண்டும்.​   


பராமரிப்பாளர்
அடிப்படை  பராமரிப்பாளர்
குடும்ப  உறுப்பினர்  அல்லது வெளிநாட்டுப்  பணிப்பெண்
பராமரிப்பாளா்கள்​  பயிற்சி​  உதவித்தொகை  பயிற்சி  வகுப்பைப்  பூர்த்தி  செய்து,  பங்கேற்புச்சான்றிதழ்  பெறவேண்டும்.​

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செ​ய்யுங்கள்​​


மேல்விவரம் அறிய 
1800-650-6060 அழைக்கவும்




5 உடற்குறை​  உள்ளவர்களுக்கு  வெளிநாட்டு  இல்லப்  பணிப்பெண  தீர்வையில்  சலுகை
பலவீனமான  முதியவரை  அல்லது  இயலாமையுள்ள  அன்புக்குரியவரைக்  கவனித்துக்கொள்ள  வெளிநாட்டுப்  பணிப்பெண்ணை  நீங்கள்  வேலைக்கு  எடுக்கும்போது,  குறைவான  தீர்வையாக  மாதத்திற்கு $60 மட்டுமே  செலுத்துவீர்கள்.



தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:
​​

​ ​

பராமரிக்கப்படுபவர்
​சிங்க​​​​​​​ப்பூர்  குடியுரிமை  உள்ளவராக  இருக்கவேண்டும்​

16 வயதுக்கும் 64  வயதுக்கும்  இடைப்பட்டவராக  இருக்கவேண்டும்​​    
அன்றாட  வாழ்க்கை  நடவடிக்கைகளில  குறைந்தத  ஒன்றைச்  செய்வதற்கு  நிரந்தரமாக  உதவி  தேவைப்படுபவராக  இருக்கவேண்டும்​
​​​  

வெளிநாட்டுப்  பணிப்பெண்ணின்  முதலாளி,  பராமரிக்கப்படுபவரின்  குடும்ப  உறுப்பினராக  இருப்பதோடு​, அடையாள  அட்டையில்  பதிவு செய்யப்பட்ட  அதே  முகவரியில்  சேர்ந்து  வாழ்பவராக  இருக்கவேண்டும்.​​​​​
​​​

வருமான  நிபந்தனைகள்  கிடையாது வெளிநாட்டுப்  பணிப்பெண்  பராமரிப்பாளர்களுக்கன  பயிற்சிக்குச்  செல்லவேண்டிய  அவசியமில்லை​

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்​​


மேல்விவரம் அறிய 
1800-650-6060 அழைக்கவும்



6 வெளிநாட்டுப்  பணிப்பெண்  மானியத்தொகை (FDW Grant)
நடுத்தரமானது  முதல்  கடுமையானது  வரையிலான  இயலாமைகள்  உள்ள  அன்புக்குரியவர்களைக்  கவனித்துக்கொள்ள  நீங்கள்  வெளிநாட்டுப்  பணிப்பெண்ணை  வேலைக்கு  எடுக்கும்போது,  மாதத்திற்கு $120 பெறுவீர்கள்.


தகுதி  பெறுவதற்கான  நிபந்தனைகள்:
​​

பராமரிக்கப்படுபவர்  சிங்கப்பூர்  குடியுரிமை  உள்ளவ​ராக  இருக்கவேண்டும்
பராமரிக்கப்படுபவர்  நிரந்தரவாசியாக  இருந்தால், வெளிநாட்டுப்  பணிப்பெண்ணின்  முதலாளி  சிங்கப்பூர்  குடியுரிமை  பெற்றவராக  இருக்கவே​ண்டும்.​

fdw grant​ ​ ​ ​
சிங்கப்பூர்  குடிமக்களுக்கு  வயது  நிபந்தனை  கிடையாது
நிரந்தரவாசிகள் 65 மற்றும்  அதற்கு  மேற்பட்ட  வயதுடையவராக  இருக்கவேண்டும்​
​​
​அன்றாட  வாழ்க்கை  நடவ டிக்கைகளில்  குறைந்தது  மூன்றைச்  செய்வதற்கு நிரந்தரமாக உதவி தேவை ப்படுபவராக  இருக்கவேண்டும்
வெளிநாட்டுப்  பணிப்பெண்ணின்​  முதலாளி,  பராமரிக்கப்படுபவரின்​  குடும்ப  உறுப்பினராக  இருப்பதோடு, அடையாள  அட்டையில்  பதிவு  செய்யப்பட்ட  அதே  முகவரியில்  சேர்ந்து  வாழ்பவராக  இருக்கவேண்டும்.


​குடும்பத்தின்  ஓவ்வொரு  நபருக்கான  வீட்டு  மாத  வருமானம் $2,600 மற்றும்  அதைவிடக்  குறைவாக  இருக்கவேண்டும். குடும்ப த்திற்கு  எந்தவித  வருமானமும்  இல்லாவிட்டால்,  உங்கள்  வீட்டின்  ஆண்டு  மதிப்பு  
$13,000-க்கும்  குறைவாக  இருக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த  பராமரிப்பு  நிறுவனம்  அங்கீகரிக்கப்பட்ட  பராமரிப்பாளர்களுக்கான  பயிற்சிக்கு  வெளிநாட்டுப்  பணிப்பெண்  செல்லவேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்​​


மேல் விவரம் அறிய 
1800-650-6060 அழைக்கவும்


​​​

NEED MORE HELP?

Call Us

At Singapore Silver Line
Mon - Fri: 8.30am - 8.30pm
Sat: 8.30am - 4.00pm

1800-650-6060

Visit Us

Visit the AICare Link branch nearest to you.

Contact Us